சாலையோர வியாபாரிகளுக்கான விற்பனைக்குழு தேர்தல் மீண்டும் ரத்து கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியல்
புதுச்சேரி, அக். 3- புதுச்சேரியில் சாலை யோர வியாபாரிகளுக்கான விற்பனைக்குழு தேர்தல் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கான 12 பேர் கொண்ட விற்பனை பிரதி நிதிகள் (வெண்டிங் கமிட்டி) தேர்விற்கான தேர்தல் வெள்ளிக்கிழமை (அக். 3) கம்பன் கலையரங்கத்தில் நடைபெறுவதாக இருந்தது. இத்தேர்தலில், சிஐடியு புதுச்சேரி மாநில சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 12 பேர் போட்டியிடுகின்றனர். அதேபோல் ஏஐடியுசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் போட்டி யிடுகின்றனர். இதற்கான பிரச்சாரம் கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்றது. புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கு தயாராக இருந்தனர். தேர்தலுக்கு ஒரு நாள் மட்டுமே இருக்கும்போது வியாழக்கிழமை இரவு புதுச்சேரி நகராட்சி ஆணை யர் எம்.கந்தசாமி சிஐடியு, ஏஐடியுசி தலைவர்களிடம் தொடர்பு கொண்டு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள தாக தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். இத்தகவல் அறிந்த சிஐடியு நிர்வாகிகள் ராம சாமி, பிரபுராஜ், அழகர் ராஜ், வடிவேல், ஏஐடியுசி நிர்வாகிகள் சேதுசெல்வம், அந்தோணி, மோதிலால், ஐஎன்டியுசி நிர்வாகி ராஜ்குமார் ஆகியோர் தலை மையில் சாலையோர வியா பாரிகள் கம்பன் கலை யரங்கத்தில் ஒன்றாக கூடினார்கள். பின்னர் கம்பன் கலை அரங்கத்தில் இருந்து ஊர்வலமாக வந்த திரளான சாலையோர வியா பாரிகள் கடலூர் சாலை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையோர வியா பாரிகளுக்கும் காவல் துறைக்கும் வாக்கு வாதங்கள் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களி டம் நகராட்சி ஆணை யர் கந்தசாமி பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டார். பின்னர் முதல்வரிடம் பேசுவதாக தெரிவித்தார். அதுவரை போராட்டத்தை கைவிடும் படி கேட்டு கொண்டார். அதற்கு தொழிற்சங்க தலை வர்கள், உடனே தேர்தல் நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவ தாக தெரிவித்தனர். இது குறித்து முதல்வர் ரங்க சாமியிடம் பேசிய ஆணையர் கந்தசாமி தொழிற்சங்க தலைவர்கள் கூட்டம் சட்டப்பேரவையில் வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி திங்கள் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக தெரி வித்தனர். ஏற்கனவே ஓராண்டிற்கு முன்பு நடைபெற இருந்த இத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலை யில் இரண்டாவது முறை யாக தற்போதும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
