பெண்கள், பெண் குழந்தைகளை பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் மாதர் சங்க வானூர் வட்ட மாநாட்டில் தீர்மானம்
ண்கள், பெண் குழந்தைகளை பாதுகாத்திட சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானூர் வட்ட மாதர் சங்க மாநாட்டில் வலியுறுத்தினர். அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க வானூர் வட்ட மாநாடு 17.08.2025 ந்தேதி ஞாயிறன்று கிளியனூரில் மாவட்ட தலைவர் கே.தமிழ்ச்செல்வி தலை மையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இலக்கியபாரதி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார். மாநாட்டில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், பெண்கள், பெண் குழந்தைகளை பாது காக்க உறுதியான சட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக்கி சட்டக் கூலி வழங்க வேண்டும், வரதட்சனண கொடுமையால் ஏற்படும் உயிர்பலிகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். மாநாட்டில் மாநில துணை செயலாளர் எஸ். கீதா கலந்து கொண்டு மாநாட்டை நிறைவு செய்து நிறைவுரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு வட்ட தலைவராக கே.தமிழ்ச்செல்வி, செய லாளராக எம்.யுகந்தி, பொரு ளாளராக எஸ். சசிரேகா உள்ளிட்ட 15 பேர் கொண்ட வட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.