வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வழங்க கோரிக்கை

திருவண்ணாமலை, ஏப். 15-திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், அண்ணாமலை ஆகியோர் தலைமையில் ஊராட்சி, உதவி இயக்குநரை சந்தித்த பழங்குடியின மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவின் விவரம் வருமாறு:-திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வானாபுரம்புதூர் பகுதியைச் சேர்ந்த, பெரிய மலைப் பாதை பகுதியில், பழங்குடியின மக்கள் மற்றும், மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்கள் வசித்து வருகின்றோம். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர்.இந்த பகுதியில், ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆழ்துளை கிணறு கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. எனவே குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று அலைய வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. எனவே பெரிய மலைப் பாதை பகுதிக்கு குடிநீர் பைப் லைன் அமைத்து தர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

;