அவலூர்பேட்டையில் இருந்து சேத்பட்டுக்கு இலவச பேருந்து இயக்க கோரிக்கை
விழுப்புரம், ஆக. 7- அவலூர்பேட்டையில் இருந்து சேத்பட்டுக்கு சென்று வர மகளிர் இலவச பேருந்து விட வேண்டும் என மேல்மலை யனூர் வட்ட மாநாட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மாதர் சங்கத்தின் மேல்மலையனூர் வட்ட மாநாடு கவிதா தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலன்டினா, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கீதா ஆகியோர் கலந்து மாதர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர். மாவட்டச் செயலாளர் இலக்கிய பாரதி மாநாட்டை வாழ்த்திப் பேசினார். இந்த மாநாட்டில் வட்ட செயலாளராக வி.அன்பரசி, தலை வராக ஆர்.கவிதா, பொருளாளராக ஏ.கர்லீனா ஆகி யோர் உட்பட 15 பேர் கொண்ட புதிய இடைக்குழு தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் மேல்மலையனூர் மற்றும் அவலூர்பேட்டை யிலிருந்து சேத்பட்டுக்கு மகளிர்க்கு இலவச பேருந்து விட வேண்டும், மேல்மலையனூரில் ஆண்கள் பெண்கள் இரு பாலரும் பயிலும் அரசு கலைக் கல்லூரி கொண்டு வர வேண்டும், மேல்மலையனூரில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பொது மருத்துவமனை வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 150 நாட்கள் வேலையும் 600 ரூபாய் கூலியும் வழங்க வேண்டும், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.