அம்பத்தூர், கொரட்டூர் பகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குப்பம், சீனிவாசாநகரில் விண்ணப்பித்த 12 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு பட்டா வழங்க கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் அம்பத்தூர் வட்டாட்சியரிடம் திங்களன்று (பிப்.10) கோரிக்கை மனு வழங்கினர். இதில் மாவட்டச் செயலாளர் கி.ராதை , மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜி, சதாசிவம் , பெரியவர் ராமசாமி ஆகியோர் உடன் உள்ளனர்.