மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி மதநல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில், வி.பி.சிந்தன் ரத்ததானக் கழகமும், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் ரத்ததான முகாம் ஐசிஎப் வளாகத்தில் நடைபெற்றது. ஐசிஎப் மருத்துவமனை தலைமை கூடுதல் அதிகாரி தேபிசோஷ் மித்ரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், சங்கத்தின் தலைவர் எஸ்.ராமலிங்கம், பொதுச் செயலாளர் பா.ராஜாராம், பொருளாளர் சுரேஷ், துணைத் தலைவர் ஜோஷி, பர்னிஷிங் டிவிஷன் செயலாளர் நடராஜ், துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் ஜெயந்தி தலைமையில் மருத்துவர்கள் கிஷோர், கவியரசு அடங்கிய குழுவினர் ரத்தத்தை சேகரித்துச் சென்றனர். மேலும் 30 பேர் புற்று நோய் உயிர்காக்கும் ஸ்டெம்செல்லை தானமாக வழங்கினர்.