tamilnadu

புதுச்சேரி மற்றும் வேலூர் முக்கிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து புதுச்சேரியில் நாளை தீப்பந்த போராட்டம்

புதுச்சேரி, டிச. 28 - குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் குடி மக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுச்சேரியில் திங்களன்று (டிச.30) தீப்பந்த போரா ட்டம் நடத்த திட்டமிடப்பட்டு ள்ளது. இது குறித்து  சமூக நல்லிணக்க இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.சிஎச். பாலமோகனன் வெளி யிட்டுள்ள அறிக்கை வரு மாறு:- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு வடிவங்களில் மக்களும், மாணவர்களும் போராடி வருகின்றனர். புதுச்சேரி யிலும் மதச்சார்பற்ற அரசி யல், சமூக நல அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவுசெய்து வருகின்றன. பாஜக ஆட்சியாளர்கள் மக்களவையில் பெரும் பான்மை இருப்பதால் மதச்சார்பற்ற ஜனநாய கத்திற்கு அச்சுறுத்தல் விளை விக்கக்கூடிய மசோ தாக்களை நிறைவேற்றி வருகின்றனர். அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளை சிதைத்து வருகிறார்கள். இஸ்லாமிய மக்களும், இலங்கைத் தமிழர்களும் திட்டமிட்டே புறந்தள்ளப்படு கிறார்கள். ஒன்றுபட்ட மக்கள் இயக்கங்களின் மூலமாகவே இதைத் தடுத்து நிறுத்த முடியும். புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கமும் நாடு தழுவிய போராட்டக் களத்தில் பங்கேற்கும் விதமாக வருகிற டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு புதுச்சேரி அண்ணா சிலையருகில் தீப்பந்தம் ஏந்துவோம் என்ற நிகழ்ச்சி க்கு திட்டமிட்டுள்ளது. மேலும் தீப்பந்த ஊர்வலம் அண்ணா சாலை, காமராஜ் சாலை வழியா பெரியார்  சிலை அருகே நிறைவடை கிறது. இந்நிகழ்ச்சியில் சமூக நல அமைப்பின் பிரதிநிதி கள், அறிவுஜீவிகள், அரசு ஊழியர், ஆசிரியர்கள், மகளிர், இளைஞர், மாணவர் இயக்கத்தின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொள்கின்ற னர்.  இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில்  2 ஆம் கட்ட தேர்தலில்  5,580 வேட்பாளர்கள் போட்டி

திருவண்ணாமலை, டிச.28- திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்களன்று (டிச.30) நடைபெற உள்ள 2 ஆம் கட்ட தேர்தலில் 5 ஆயிரத்து 580 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 27 ஆம் தேதியன்று, 9 ஒன்றி யங்களுக்கான முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 7 லட்சத்து 16 ஆயி ரத்து, 624 பேர் வாக்களித்து ள்ளனர். 82.82 விழுக்காடு வாக்குகள் பாதிவாகின. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு, செங்கம், புதுப்பாளையம், ஜவ்வாதுமலை, வந்தவாசி, ஆரணி, மேற்கு ஆரணி ஆகிய 9 ஒன்றியங்களில் திங்களன்று (டிச.30) 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இந்த 9 ஒன்றியங்களில்  5,580 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர்.  1590 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு ள்ளன. இதில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 951 வாக்காள ர்கள் வாக்களிக்க உள்ள னர்.       வந்தவாசி ஒன்றியம், சென்னாவரம் கிராம பஞ்சாயத்து, 8 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேண்டாமிர்தம் (54) போட்டி யிட்டார்.  இவருக்கு  சீப்பு சின்னம் வழங்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர்  23 ஆம் தேதி  உடல்நலக்குறை வால் அவர் உயிரிழந்தார்.  இதனால் இந்த வார்டில் மட்டும் திங்களன்று நடை பெறவிருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூரில்  ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி

திருக்கோவிலூர்,டிச.28- கள்ளக்குறிச்சி மாவட் டம், திருக்கோவிலூர் -திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செட்டித்தாங்கல் கிரா மத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.மையம் உள்ளது.  சனிக்கிழமையன்று (டிச.28) காலை  ஏ.டி.எம்.க்கு வந்த பொதுமக்கள்  எந்திரம் உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட ஏ.டி.எம் எந்திரத்தை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் காவல்துறையி னர் நடத்திய விசாரணையில், ஏ.டி.எம்.மையத்திற்குள் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா மீது துணியை போட்டு மறைத்துள்ளனர்.  ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முடியாததால்  அங்கிருந்து சென்றது தெரிய வந்துள்ளது. அதேபோல்,  திருக்கோவி லூர் காவல் நிலையம் அருகே ஏரிக்கரை மூலை யில் உள்ள தேசியமய மாக்கபட்ட வங்கிக்கு சொந்த மான ஏ.டி.எம்.மையத்து க்குள் நுழைந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் உடைக்க முடியாததால் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.  காவல்துறை யின் மோப்ப நாய் கண்டு பிடிக்காமல் இருக்க ஏ.டி.எம் மையம் முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு மர்மநபர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்த இரண்டு கொள்ளை முயற்சிகள் குறித்து திருக்கோவிலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம் மையங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.

கலப்படப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை

வேலூர்,டிச.28- வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள சில கடைகளில் போலி டீ தூள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்டஆட்சியர்  சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து  ஆய்வு நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க உணவு பாது காப்புத்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமை யில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ், நாகேஸ்வரன், ரவிந்திரநாத், ராஜேஷ், பழனி சாமி ஆகியோர் அடங்கிய குழு, வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 15க்கும் அதிக மான கடைகளில் வெள்ளியன்று சோதனை யில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் அரசால் தடைசெய்ய ப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 50 கிலோ, போலி டீ தூள் 300 பாக்கெட்டுகள், எச்சரிக்கை விளம்பரம் இல்லாத 70 சிகரெட் பாக்கெட்டுகள், 2 மளிகை பொருட்களில் கலப்படம் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.  டீ தூள் பாக்கெட்டுகளில் 2 விதமான மாதிரிகளையும், மளிகை பொருட்களில் 2 விதமான மாதிரிகளையும் சேகரித்து சேலம் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபோன்று பொதுமக்கள் நலனில் பங்கம் விளைவிக்கும் வகையில் கலப்பட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி களுக்கு முதல் முறை என்பதால்  ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், 2-வது முறை என்றால் ரூ. 10 ஆயிரம், 3வது முறை என்றால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்க ப்படுவர் என உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக பல கோடி  மோசடி

விருதுநகர், டிச.28- விருதுநகர் அருகே உள்ளது இராமக்குடும் பன்பட்டி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் வேல்முரு கன். இவரது மகன் கருப்பசாமி. இவர் பொறியியல்பட்டம் பெற்றுள்ளார். சென்னை ஆதம்பாக்க்கத்தைச் சேர்ந்த வர் பத்மநாபன். இவர் வேல்முருகனி டம், சென்னை விமான நிலையத்தில் கருப்பசாமிக்கு வேலைவாங்கித் தருவதாகக்கூறியுள்ளார். இதற்காக வேல்முருகனிடம் ரூ.2.78 லட்சம் பெற்றுள்ளார். ஆனால்,வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதுடன் பணத்தையும் திரும்பத் தரவில்லை.  வேல்முருகன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பத்மநாபனை தேடி வந்தனர். இந்நிலையில் விருதுநகர் வந்த பத்மநாபனை காவல்துறை யினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தியவிசாரணையில், சென்னை, காஞ்சிபுரம், திண்டிவனம், திருவண்ணா மலை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் பலரிடம் வேலை வாங்கித் தருவதாகபல கோடி ரூபாய்  மோசடியில் ஈடுபட்டதுதெரிய வந்தது.இவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து  விசாரணைநடத்தி வருகின்ற னர்.

வேன் - ஆம்னி பேருந்து மோதல்: 20 பேர் படுகாயம் ,வேன் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

விக்கிரவாண்டி, டிச.28- விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவம் (70). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் கோலியனூ ரில் ஓட்டல் நடத்தி வருகி றார். இவரது மனைவி கவுரி (67). இவர் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இறந்து விட்டார். துக்க காரியங்கள் முடிந்ததும் சாம்பசிவம் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலான மேல்மலைய னூர் அங்காளம்மன் கோவி லுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி வெள்ளியன்று சாம்பசிவம் தனது குடும்ப த்தினர் மற்றும் உறவினர்க ளுடன் ஒரு சுற்றுலா வேனில் மேல் மலையனூர் அங்காள ம்மன் கோவிலுக்கு சென்றார். வேனை சின்னசாமி (35) என்பவர் ஓட்டி சென்றார். பின்னர் அங்கு சாமி தரிசனத்தை முடித்து விட்டு சனிக்கிழமையன்று (டிச.28) அதிகாலை வேனில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். வேன் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு தேசிய நெடுஞ்சாலை பிரியும் சாலையில் திரும்பியது. அப்போது பின்னால் மேல்மருவத்தூர் சென்ற ஆம்னி பேருந்து  திடீரென்று சுற்றுலா வேன் மீது பலமாக மோதியது. இதில் வேன் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதமைடைந்தது.  இந்த விபத்தில் வேனில் இருந்த 20 பேர் படுகாயமடைந்தனர்.

வேன் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

திருவண்ணாமலை,டிச.28- விழுப்புரம் மாவட்டம். செஞ்சி தாலுகா வணக்கம் பாடியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம், சாவல்பூண்டி, சின்னியம்பேட்டை பகுதியை சேர்ந்த  உறவினர்கள்  வேன் ஒன்றில்  வணக்கம்பாடிக்கு புறப்பட்ட னர்.  வேனை  சுரேஷ் ஓட்டிச் சென்றார். சிறுநாத்தூரில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் சென்றபோது வேன் திடீரென  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இதில் சாவல்பூண்டியை சேர்ந்த நடேசன் மனைவி மங்கை (65), சின்னியம்பேட்டையை சேர்ந்த ஏழுமலை மனைவி அமுதா (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்  விஜயா, வீரம்மாள், முனியம்மாள், விருத்தம்மாள், நாகம்மாள், சுதா, கார்த்தி, மகேந்திரன், சுமதி, வள்ளி, கலைவாணி, முருகன், பிச்சம்மாள், கனகவள்ளி, மணியம்மாள், அலமேலு, எல்லம்மாள் ஆகிய 17 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்தவர்களைமீட்டு திருவண்ணா மலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

;