சைபர் மோசடியில் சிக்கி கடந்த ஏழு மாதங்களில் ஆயிரம் கோடிக்கும் மேல் பொதுமக்கள் இழந்திருப்பதாக போலீசார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சைபர் கிரைம் மோசடியில் ரூ. 1010 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 7 மாதங்களில் 88,479 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும். இழந்த பணத்தில் ரூ. 314 கோடியை சைபர் கிரைம் முடக்கி இருப்பதாகவும், ரூ.62 கோடியை மீட்டு புகார்தாரரிடம் கொடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.