tamilnadu

img

வீட்டு மனை கேட்டு சிதம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

வீட்டு மனை கேட்டு சிதம்பரம் சார்பதிவாளர்  அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

சிதம்பரம், ஆக.14- சிதம்பரம் சார்பதிவாளர் அலுவல கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் 500க்கும் மேற்பட்டவர்கள் வீட்டு மனை கேட்டு குடியேறும் போராட்டம் நடைபெற்றது. சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட தில்லையம்மன் ஓடை, கோவிந்தசாமி தெரு, நாகச்சேரி குளம், ஓமக்குளம், அண்ணாக்குளம், ஞானபிரகாச குளக்கரை, அம்பேத்கர் நகர், நேரு நகர், பாலமான் இறக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வந்த னர். இவர்களின் வீடுகளை நீர்நிலை ஆக்கிர மிப்பு என கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 1000க்கும் மேற்பட்ட வீடுகளை நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையி னர் இடித்து தரைமட்டமாக மாற்றியுள்ளனர். வீடுகளை இழந்த ஏழை மக்களுக்கு மாற்று இடம் கேட்டு பல கட்ட போராட்டங்களை  சிபிஎம் தலைமையில் பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தியும் அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வப்போது சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் போர்க்கால அடிப்படையில் இனியும் காலம் தாழ்த்தா மல் மாற்று இடம் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் 500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆகஸ்ட் 14ந்தேதி சிதம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் மல்லிகா முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையா, ராமச்சந்திரன், நகர செயலாளர் ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தை யில், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு தற்போது சிதிலமடைந்து பயன்படுத்த முடியாமல் உள்ளது. அதனை இடித்து விட்டு அந்த இடத்தில் 300 குடும்பத்திற்கு அடுக்குமாடி குடி யிருப்பு கட்டி தருவது என்றும் மீதி உள்ள வர்களுக்கு வீர சோழகன் கிராமத்தில் இடத்தை வாங்கி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.  இதனை ஏற்று போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.