tamilnadu

img

தனியார் ரயிலுக்கு வரவேற்பு இல்லை: சேவையை ரத்து செய்தது ஐ.ஆர்.சி.டி.சி...

சென்னை:
ஐஆர்சிடிசி இயக்கி வந்த லக்னோ- தில்லி, மும்பை -அகமதாபாத் ஆகிய இரண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் களும் நவம்பர் 23 ,24 ஆகிய தேதிகளிலிருந்து ரத்து செய்யப்படுகின்றன. 746 இருக்கைகள் உள்ள இந்த ரயிலில் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தான் பயணிகள் வருகின்றனர். மார்ச் மாதம் ஊரடங்கு அறிவித்தபோது இவை ரத்து செய்யப்பட்டன. மீண்டும் அக்டோபர் மாதம் முதல் ஓடத் தொடங்கின. ஆனால் போதிய பயணிகள் வராததால் இரண்டு ரயில்களின் சேவையை ரத்து செய்துவிட்டதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. 

இந்த இரண்டு வண்டிகளும் முதல் தனியார் வண்டிகள் என்று தம்பட்டம் அடிக்கப்பட்டன. லாபம் வரவில்லை என்றால் வண்டியையே ரத்துசெய்வார்கள் என்பதற்கு இதைத் தவிர வேறு உதாரணம் தேவையா? ஏற்கனவே தில்லி விமானநிலையம்- மெட்ரோ லைனில்  ரிலையன்ஸ் நிறுவனம்  லாபம் வரவில்லை என்று அம்போ என  விட்டுவிட்டு ஓடியது. அரசு அதை எடுத்து தற்போது நல்ல லாபத்துடன் நியாயமான  கட்டணத்தில் நடத்திக்கொண்டிருக்கிறது. மக்களும் வரவேற்கின்றனர். புதுதில்லி ரயில் நிலையத்திலிருந்து இந்திரா காந்தி விமான நிலையத்திற்குச் சிறப்பான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச பயணிகளும் இந்த சேவையை வரவேற்கின்றனர். ஆனால் தனியாரைப் பொறுத்தவரை லாபம் வரவில்லை என்றால் விட்டு விட்டு ஓடி விடுவார்கள். எனவேதான் தனியார்மயம் தேசவிரோதம், மக்கள்விரோதம் என்று இடதுசாரிக்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள்.இதை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல தனியார் மயத்திற்கு வக்காலத்து வாங்குவோரும் கவனத்தில் கொள்வது நல்லது.

                         ********************

மக்கள் அல்ல; லாபமே முக்கியம் தனியாருக்கு

ஐஆர்சிடிசி ஓட்டிவந்த லக்னவ் தில்லி, மும்பை அகமதாபாத் 2 தேஜஸ் எக்ஸ்பிரஸ்களும் நவம்பர் 23 ,24 ஆகிய தேதிகளில் இருந்து ரத்து செய்யப்படுகின்றன. அவற்றில் 746 சீட்டுகள் இருக்கின்றன .அவற்றில் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தான் பயணிகள் வருகின்றனர். மார்ச் மாதம் லாக் டவுன் அறிவித்தபோது இவை ரத்து செய்யப்பட்டன. மீண்டும் அக்டோபர் முதல் ஓடத் தொடங்கின. ஆனால் போதிய பயணிகள் வராததால் இரண்டு ரயில் வண்டிகளையும் இப்போது ரத்து செய்துவிட்டதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்த இரண்டு வண்டிகளும் முதல் தனியார் வண்டிகள் என்று தம்பட்டம் அடிக்கப்பட்டன. லாபம் வரவில்லை என்றால் வண்டியையே ரத்து செய்வார்கள் என்பதற்கு இதைத் தவிர வேறு உதாரணம் தேவையா? ஏற்கனவே தில்லி ஏர்போர்ட்- மெட்ரோ லைன் ரிலையன்ஸ் போட்டு லாபம் வரவில்லை என்று விட்டுவிட்டு ஓடியதை நினைவுபடுத்துகிறோம். இதுதான் தனியார்மயம் . லாபம் வரவில்லை என்றால் விட்டு விட்டு ஓடி விடுவார்கள். எனவேதான் தனியார்மயம் தேசவிரோதம், மக்கள் விரோதம் என்கிறோம்.

டிஆர்இயு மாநிலப் பொதுச்செயலாளர் இளங்கோ

;