தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்துதமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 2வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்திற்கு ஏ.ஜோசப் அன்னையா, குப்புராமன், டி.சரஸ்வதி, என்.சகேயு சத்தியகுமார் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி ராணிப்பேட்டையில் கூட்டு நடவடிக்கைக்குழுவின் மாவட்டச் செயலாளர் செ. சரவணன் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் வெள்ளியன்று (ஜூலை 18) ஆசிரியர்கள் 2வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.