காவல்துறை கண்காணிப்பை அதிகரிக்க பேரணாம்பட்டு விவசாயிகள் கோரிக்கை
வேலூர், ஜூலை 2- வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர் மனுக்கள் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெறப்படு கிறது. இம்முகாமில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்டக்குழுசார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.மகாலிங்கம், செயலாளர் கே.சாமிநாதன் மனு அளித்தனர். அதில் பேரணாம்பட்டு பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் கூடுதலாக காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்கூர் பகுதியில் தொடர் திருட்டை தடுக்கும் வகையில் இரு சக்கர வாகனத்தில் காவல்துறையினர் ரோந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் குடியாத்தத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்த னர். விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் உடனி ருந்தனர். முன்னதாக இதே கோரிக்கையை வலி யுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியரிடமும் மனு வழங்கினர்.