tamilnadu

img

பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காதவர்களை கைது செய்யலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காதவர்களை கைது செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மங்கல நாடு வடக்கு கிராமத்தில் உள்ள மங்கல நாயகி அம்மன் கோவில் மற்றும் கோவில் திருவிழாக்களுக்கு சென்று வழிபட, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த தீண்டாமை செயலை எதிர்த்து, அப்பகுதியை சேர்ந்த எம்.மதிமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பி.டி.ஆஷா, "புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், கோயிலுக்குள் அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்வதை உறுதி செய்ய வேண்டும். அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அறந்தாங்கி கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதேனும் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்யலாம்" என்று உத்தரவிட்டார்.