tamilnadu

img

அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவைத்தொகையை வழங்குக!

சென்னை, ஜூலை 4 - 104 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை கேட்டு வியாழனன்று (ஜூலை 4) மாநிலம் முழுவதும் 15 இடங்களில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துக் கழகத்தில் 85  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதி யர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு 2015 நவம்பர் முதல் அரசு அக விலைப்படி உயர்வு வழங்கப் படாமல் உள்ளது. இதனைக் கண்டி த்து தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் வியாழனன்று போராட்டம் நடைபெற்றது. மருத்துவப் படியை 100-இ லிருந்து 300 ரூபாயாக உயர்த்த வேண்டும்,

குறைந்தபட்ச ஓய்வூதிய மாக 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்க வேண்டும், ராணுவ குடும்ப ஓய்வூதியத்துடன்- கழக குடும்ப ஓய்வூதியம் பெறுகிறவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு தர வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், ஓய்வூதியத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, முதல் தேதியன்று வழங்க வேண்டும், 2022 நவம்பர்  முதல் ஓய்வுபெற்ற தொழிலாளர் களுக்கு வழங்கப்படாமல் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த உயர்வு நிலுவைகளை தர வேண்டும்,

நீதி மன்ற தீர்ப்புக்களை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஓய்வுபெற் றோர் நல அமைப்பின் கிளைத் தலைவர் டி. குருசாமி தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செய லாளர் கே. கர்சன், பொருளாளர் வரதராஜன், சென்னை கிளை பொதுச்செயலாளர் கே. வீரரா கவன், பொருளாளர் எஸ். ஆதி மூலம் உள்ளிட்டோர் கோரிக்கை களை முன்வைத்துஉரையாற்றினர்.