tamilnadu

img

காலமானார்

 சென்னை, ஜூன் 18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சைதாப்பேட்டை பகுதிக்குழு உறுப்பினர் டி.அன்பரசனின் தந்தை பி.தெய்வ சிகாமணி செவ்வாயன்று (ஜூன் 18) காலமானார். அவருக்கு வயது 65. மேற்கு சைதாப்பேட்டை, விஜிபி சாலையில் உள்ள உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.கல்யாண சுந்தரம், வெ.ராஜசேகரன், ஆர்.வேல்முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அன்னாரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஜாபர்கான் பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.