திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

தமிழகத்திற்கு 1-2 ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் - மழைக்கு வாய்ப்பு

அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வாங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் டிச.,1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது. தற்போதும் சில மாவட்டங்களில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. நிவர் புயல் சென்ற தினமே அடுத்த புயலுக்கான அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, 29 ஆம் தேதியே மத்திய வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் 2 ஆம் தேதி நாகப்பட்டினம் அருகே இந்த புதிய புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றும் பலமாக வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஆரஞ்சு அலர்ட் என்பது, கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். குறிப்பாக மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கைக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

;