சென்னை,ஆக.21- நவீன தொலைத் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி காலகட்டத்தில் தொலை மருத்துவம் என்பது தொலைத் தொடர்பு இணைப்புகள் மூலம் மக்களுக்கு வீட்டில் இருந்தபடியே சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. இது சுகாதார சேவை களை பயனாளிகள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உன்னதமான முறையாகும். கொரோனா பேரிடர் காலத்தில், தொலை மருத்து வத்தின் மகத்துவத்தை இந்த உலகம் அறிந்தது. சிறப்பு மருத்துவ ஆலோசனை தேவைப்படும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இருக்கும் வய தானவர்கள் மற்றும் பயணம் செய்ய இயலாதவர்களுக்கு தொலை மருத்துவம் சிறந்த பரிசாக அமைகிறது. இதை கருத்தில் கொண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் தொலை மருத்து வம் எனப்படும் இணைய வழி மருத்துவ ஆலோசனை சேவையை மக்களுக்கு சமீபத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். திங்கள் முதல் சனிக் கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையில், மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள லாம். பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தை நல மருத்துவம், முதியோர் நல மருத்துவம் மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகிய துறை களை சார்ந்த சிறப்பு மருத் துவ நிபுணர்கள் ஆலோ சனை வழங்கி வருகின்ற னர். 18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் இந்த சேவையை பெறுவதற்கு http://teleconsultation.s10safecare.com இணைப் பினை உபயோகிக்கலாம் என்று மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.