tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

 உரிமம் பெறாமல் செயல்படும் மனநல  மையங்களுக்கு ஒரு மாத அவகாசம்

விழுப்புரம், ஆக. 20 - விழுப்புரம் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில், மனநல மருத்துவ மனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதைப் பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறு வாழ்வு மையங்கள் மனநல பராமரிப்பு சட்டத்தின்படி, மாநில மனநல ஆணை யத்திடம் உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும். பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கத் தவறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

தமுஎகச கிளை  உதயம்  

திருப்பத்தூர், ஆக.20- தமுஎகச திருப்பத்தூர் புதிய கிளை துவக்கப்பட்டது. க.சாமு தலைமையில் நடைபெற்ற இந்த துவக்க நிகழ்வில் கோ.ரவி வரவேற்க, சி கேசவன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.  மாணிக்க முனிராஜ் துவக்கி வைத்து பேசினார். தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்  அஜய், தமுஎகச மேனாள் மாவட்ட தலைவர் முல்லை வாசன், ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். கிளைத் தலைவராக மாரிமுத்து, செயலாளராக சாமு, பொருளா ளராக ரவி உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இன்டர்நெட் கேபிள் பதிக்க பள்ளம்  தோண்டியபோது எரிவாயு குழாய்சேதம்

திருப்பபோருர், ஆக.20- சென்னை – மாமல்லபுரம் ராஜீவ் காந்தி சாலை யில் திருப்போரூரில் அக்ஷார் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இன்டர்நெட் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியபோது திங்க்கேஸ் என்ற தனியார்  நிறு வனத்திற்கு சொந்தமான குழாயில் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக குழாயில் இருந்து எரிவாயு வெளியேறியதால் உடனடியாக எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் எரிவாயு நிறுவனத்தின் ஊழியர்கள் சேதத்தை உடனடியாக சரி செய்து எரிவாயு விநியோகத்தை சரிசெய்தனர். நடப்பு சட்டத்தின்படி ஐபிசி பிரிவு 285 மற்றும் 336-ன் கீழ், அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் பள்ளம் தோண்டும் பணிகளால் ஏற்படும் சேதங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.  அரசு சட்டத்தின்படி தனி நபர்கள்அல்லது ஒப்பந்தகார்கள் பள்ளம் தோண்டும் பணிகளைத் தொடங்க திட்டமிட்டால், அவர்கள் நகராட்சி அல்லது நகர எரிவாயு வினியோக நிறுவனத்திற்கு தோண்டுவதற்கு முன்பு தொடர்பு கொள்ள வேண்டும். திங்க்  கியாஸ் (நிறுவனத்தின் கட்டணமில்லா எண். +91 8056847333/1800-2022-999 மூலம் தெரிவிக்க வேண்டும்என அந்த நிறுவனம் கூறியுள்ளது.