tamilnadu

img

இலவசமாக கொண்டைக் கடலை வழங்குக.... மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

சென்னை:
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசமாக கொண்டைக் கடலை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, மாநிலச் செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த 5 கி. இலவச கொண்டைக்கடலை அந்தியோதயா அண்ண யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளதை வரவேற்கிறோம்.

முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு இத்திட்டத் தில் பயன் கிடையாது.  இதனால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட இக் குடும்பங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏழை மாற்றுத்திறனாளிகள், அரசு வழங்கும் 5 கி. இலவச கொண்டைக் கடலை  வாங்க முடியாமல்  ஏமாற்றம் அடைந் துள்ளனர். இந்த பிரிவு அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், கொண்டக்கடலை வழங்காதது முரணாக உள்ளது.மாற்றுத்திறனாளிகள் இயல் பாகவே நோய் எதிர்ப்புத்திறன் குறைவானவர்கள் என்பதால், கொரோனா நோயை எதிர் கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கி, சிறப்பு கவனமெடுத்து பாதுகாக்க வேண்டுமென உலக நாடுகளை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்ரோஸ் ஜூலை மாதம் எச்சரித்துள்ளதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். எனவே, மாற்றுத் திறனாளி இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் அடையாள சான்று நகலை பெற்றுக் கொண்டு 5 கி. கொண்டைக்கடலை வழங்க உரிய உத்தரவுகளை முதலமைச் சர் பிறப்பிக்க வேண்டுகிறோம்.

இத்தகைய சிறப்பு திட்டங்களில் தடை இல்லாமல் பயன்பெற, மாற்றுத்திறனாளிகள் இடம் பெற்றிருக்கும் என்பிஎச்எச் குடும்ப அட்டைகளை பிஎச்எச் குடும்ப அட்டைகளாக மாற்றி வழங்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்து சமூகப்பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு திட்டங்களில் மற்றவர்களுக்கு வழங்குவதைவிட 25 விழுக்காடு கூடுதல் அளவு வழங்க வேண்டுமென்ற மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 24(1)ன்படி  மாற்றுத் திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக கொண்டைக்கடலை வழங்கவும், இதற்காக  சம்பந்தப் பட்ட அரசாணை எண்.137ல் உரிய திருத்தங்களை மேற்கொண்டு நிறைவேற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

;