tamilnadu

img

ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க கருத்து கேட்பு தேவையில்லை.... மத்திய அரசு உத்தரவை எதிர்த்து வழக்கு...

சென்னை:
ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க மக்களிடம் கருத்துக்கேட்பு தேவையில்லை என்ற உத்தரவுக்கு எதிராக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து  பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
கடந்த ஜனவரியில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின்படி, ஹைட்ரோகார்பன் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள அமைக்கப்படும் ஆய்வுக் கிணறுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வும், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமும் அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது  பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்குமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

;