சென்னை:
ஐஐடியில் இடஒதுக்கீட்டை ஒழிக்க மோடி அரசு சதித் திட்டம் தீட்டியுள்ளது வன்மையான கண்டனத்திற்கு உள்ளானது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள் ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட் டில் உள்ள ஐஐடி என்னும் இந்தியத் தொழில்நுட்ப கல்வியகத்தில் ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத் துள்ளதாக வந்துள்ள தகவல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பெறப் பட்ட தகவலின் அடிப்படையில் ஐஐடிகளை உயர் தகுதிமிக்க கல்வி நிறுவனமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ள குழு ஒன்று பரிந்துரைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.உயர் தகுதிமிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்படும் நிறுவனங்கள் இட ஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் மத்திய கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பெரும் முயற்சியால் அரசு நிறுவனமாக உருவாக்கப்பட்டவை ஐஐடிக்கள்.நாட்டின் தலைசிறந்த நிறுவனமாக இன்று ஐஐடிக்கள் உயர்ந்துள்ளதற்கு ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டுவந்தது எவ்வகையிலும் தடையாக இருக்கவில்லை.இடஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஐஐடியின் ஏராளமான பேராசிரியர்கள் தமது துறையில் உலகம்போற்றும் சாதனைகளைப் படைத்துள்ளார்கள்.எடுத்துக்காட்டாக சென்னை ஐஐடியின் கணிதத் துறையில் பணியாற்றிய முனைவர் வசந்தா கந்தசாமி உலகம்போற்றும் கணிதப் பேராசிரியராகத் திகழ்கிறார்.சமூக நீதிக்குச் சாவு மணி அடிக்க வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சரவை இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது.இப்போது ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டுக் கொள் கையை ஒழிக்க முனையும் பாஜக மாணவர்கள் சேர்க்கையிலும் இடஒதுக்கீட்டை ஒழிக்க முனைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.பிற்படுத்தப்பட்ட இந்துக் கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் எதிரான பாஜகவின் இந்தச் சமூக நீதி விரோதக் கொள்கையை முறியடிக்க சமூக நீதியில் விருப்பம் உள்ள அனைவரும் ஒன்று சேர்வது காலத்தின் கட்டாயமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.