tamilnadu

img

மோடியின் ‘தியான நாடகம்’ துவங்கியது! விதி மீறலை வழக்கம் போல வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்

சென்னை, மே 30- பிரதமர் நரேந்திர மோடி, தியானம் என்ற பெயரில் இறுதிக்கட்ட மவுனப் பிரச் சாரத்தை, கன்னியாகுமரியின் விவேகா னந்தர் மண்டபத்தில் வியாழனன்று துவங்கினார். 2 டன் ஏசி இயந்திரம் மூலம்  குளிரூட்டப்பட்ட அறையில் ஜூன் 1 வரை  தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்த தியான நாடகத்தை அவர் நடத்துகிறார்.

இறுதி முயற்சியாக  தியான நாடகம்

ஜூன் 1 அன்று நடைபெறவுள்ள ஏழா வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்  பதிவுக்கான பிரச்சாரம் வியாழக்கிழமை யுடன் முடிவடைந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் இறுதிக் கட்ட பிரச்சாரத்தை முடித்த கையோடு, பிற்பகல் 3.55 மணிக்கு விமானம் விமா னம் மூலம் திருவனந்தபுரம் வந்த பிரத மர் மோடி, கடைசிக்கட்ட முயற்சியாக, ‘தியானம்’ என்ற மவுனப்பிரச்சாரத்தை- நாடகத்தை மோடி கையில் எடுத்துள் ளார். வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1  வரை இந்த தியான நாடகத்தை அவர் நடத்துகிறார்.

‘இந்தியா’ கூட்டணி  கடும் எதிர்ப்பு

இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல்; தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் மோடி தனது தியானத்தின் மூலம் இறுதிக் கட்ட தேர்தலில், மத உணர்வைத் தூண்டி வாக்குகளைப் பெற திட்டமிடுகிறார், இதற்காகவே தியானம் என்ற நாட கத்தை அரங்கேற்றுகிறார்; எனவே, இந்த  தியான நாடகத்திற்கு தேர்தல் ஆணை யம் தடை விதிக்க வேண்டும் என்று திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங் கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல்  ஆணை யத்திடம் புகார் அளித்தன. ஆனால், வழக்கம் போல தேர்தல் ஆணையம் அதைக் கண்டுகொள்ளவில்லை.

கன்னியாகுமரி  வந்தடைந்த மோடி

இதையடுத்து, தில்லியிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு பிற்பகல் 3.55 மணிக்கு விமானத்தில் வந்த  பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலி காப்டர் மூலம் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடுக்கு வந்திறங்கினார். 

பின்னர் சாலை மார்க்கமாக அரசு விருந்தினர் இல்லம் சென்று ஓய்வு எடுத்த  மோடி, அங்கிருந்து பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி னார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பகவதி அம்மன் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

குளிரூட்டப்பட்ட  அறையில் தியானம்

அதைத்தொடர்ந்து கடற்கரை சென்று, தனி படகு மூலம் விவேகானந் தர் பாறைக்கு சென்ற மோடி, அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பதிந்துள்ள பகவதி அம்மன் கால் பதித்த இடத்தை மலர் வைத்து வணங்கினார். பின்னர் மாலை 6 மணியளவில் குளிரூட்டப்பட்ட அறை யில் தியான நாடகத்தைத் துவங்கினார்.

ஜூன் 1 பிற்பகல் வரை, இந்த தியான நாடகத்தை நடத்தும் அதன்பிறகு படகு மூலம் கரை திரும்புகிறார். பின்னர் வந்தபடியே, திருவனந்தபுரம் வழியாக தில்லி செல்கிறார்.

சுற்றுலா பயணிகள் அச்சம்;  கடைகள் அடைப்பு

முன்னதாக,   பிரதமர் மோடியின் தியானம் காரணமாக கன்னியாகுமரி யில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந் தது. மோடி வருவது தெரியாமல், ஏற்கெ னவே சுற்றுலா வந்த பயணிகளோ படகு சவாரி செல்லமுடியாமலும் குவிக்கப் பட்டிருந்த காவல்துறையினரின் கெடு பிடிகளாலும் மிகுந்த அச்சத்துடனும் ஏமாற்றத்துடனும் ஊர் திரும்பினர்.  விவேகானந்தர் பாறைக்கு செல்லும் வழியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

பிரதமரின் வருகையையொட்டி 4 ஆயிரம் மத்திய - மாநில காவல்துறை யினர் குவிக்கப்பட்டனர். வியாழனன்று காலை சுமார் 2 மணி நேரம் மட்டும்  சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்கு அனு மதிக்கப்பட்டனர். படகு சவாரிக்கான சீட்டு எடுப்பதற்கு முன்பு காவல்துறை யினர் சுற்றுலா பயணிகளின் ஆதார் விவரங்களை பதிவு செய்தனர். பைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பத்து மணிக்கு பிறகு படகு சவாரிக்கு பயணிகள் அனுமதிக்கப் படவில்லை.

காவல்துறையினரின் கெடுபிடிகளால் அச்சமுற்ற சுற்றுலா பயணிகளின் சாலையில் நடமாட்டத்தை குறைத்துக் கொண்டனர். பலர் பேருந்து கள் பிடித்து ஊர் திரும்பினர். சாலை  ஓர கடைகள் மூடப்பட்டதால்  பெரிதும் விரும்பக் கூடிய சங்கினால் செய்யப் பட்ட கடற்பொருட்களை வாங்க முடியா மலும் ஏமாற்றமடைந்தனர். திறந்திருந்த சில ஹோட்டல்களும் விடுதிகளும் வியாபாரமின்றி வெறிச்சோடின.

டிரெண்டான கோ பேக் மோடி

இதனிடையே, பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘கோ பேக் மோடி’ என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகியுள் ளது. சென்னை உட்பட பல்வேறு பகுதி களில் #GoBackModi# சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. 

குறிப்பாக, “ஒடிசா தேர்தல் பரப்புரை யில் தமிழர்களை இழிவுபடுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கே வருவதா?” என சுவரொட்டிக்குத் தலைப்பிட்டு Hello Netizens… Ready Start 1 2 3 #GoBackModi vd Twitter Trending- க்கு அழைப்புவிடும் வகையிலும், இந்திய தேர்தல் ஆணையமே தூங்காதே…! எனவும் சென்னை முழுவதும் சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் ‘கோ பேக் மோடி’ டிரெண்ட் ஆனது.

கோடை விடுமுறை நிறைவடைய 
ஒரு வார காலமே உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். சுற்றுலா பயணிகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் மோடியின் குமரி வருகை உள்ளது. 

- ஆர்.செல்லசுவாமி
சிபிஎம் கன்னியாகுமரி மாவட்டச்செயலாளர் 

 

;