tamilnadu

img

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்!

காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.