சிபிஎம் புகாரை தொடர்ந்து அமைச்சர் ஆய்வுகுடிநீருடன் கழிவு நீர் கலப்பதை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
சென்னை, செப்.10 - தரமணி பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை தினசரி கண்காணித்து தடுக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். 178வது வட்டம் தரமணி பகுதியில் மூன்று மாதங்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. உட்புறச்சாலைகள், தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. மேலும் தெருக்கள் பழுதடைந்து மேடு பள்ள மாக உள்ளது. இதனால் மழை பெய்யும் போது சாக்கடை நீரும் சேர்ந்து தேங்கி நிற்கிறது. தெருக்களில் நடமாட முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக குடிநீர் மற்றும் கழிவுநிரகற்று வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இதன் மீது விரைந்து நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதிச் செய லாளர் எஸ்.முகமதுரஃபி திங்களன்று (செப்.8) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியத்திடம் மனு அளித்தார். இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிர மணியன் புதனன்று (செப்.10) தரமணி பகுதியில் ஆய்வு செய்தார். கவுன்சிலர் பாஸ்கர், மாநகராட்சி வட்டார அலுவலர், வாரிய அதிகாரிகள், காவல்துறையினரை உள்ளிட்டோருடன் வந்து குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது சிபிஎம் தலைவர்கள் தெருத்தெருவாக அழைத்துச் சென்று பிரச்சனைகளை சுட்டிக்காட்டினர். இதன்பின்னர், குடிநீரை ஆய்வு செய்த அமைச்சர், குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். தினசரி கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டம் முழுவதும் உள்ள விடுதிகளை ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாத விடுதிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அதி காரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், 230 உட்புறச்சாலைகளில் 5 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. 5 சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மேலும் 30 சாலைகள் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். எஞ்சிய சாலைகளில் பழுதுபார்ப்பு பணி உடனடியாக மேற்கொள்ளப்படும். கழிவுநீர் வழிந்தோடும் பிரச்சனை உடனடியாக சரி செய்யப்படும் என்று மக்களிடையே உறுதி அளித்தார்.