நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மருத்துவ கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நேரு விளையாட்டரங்கில், கடந்த வாரம் தொடங்கிய மருத்துவ கலந்தாய்வு நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில்,வரும் திங்கள்கிழமை முதல் (நவ.30) மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என ெரிவிக்கப்பட்டுள்ளது.
30ஆம் தேதி தொடங்கும் மருத்துவ கலந்தாய்வு, டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.