tamilnadu

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, மே 20 - தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியல் வரை குறைந்துள்ளது.  

இது மக்களை  மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இராமநாதபுரத்தில் 120 மி.மீ,. மழை பதிவாகி யுள்ளது. இதற்கடுத்தபடியாக மதுரை (தல்லாகுளம்) 110 மி.மீ., திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடியில் 100 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சென்னை வானிலை மையம் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் செவ்வாயன்றும் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை,  திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவா%ர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, க%ர், நாமக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங் களில் ஒரு சில இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும்.

;