tamilnadu

img

கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாசில்லா தீபாவளி மேளா

கார்த்தி வித்யாலயா பள்ளியில்  மாசில்லா தீபாவளி மேளா

கும்பகோணம், அக். 19-  தீபாவளியை முன்னிட்டு, கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவ மாணவியர்கள் நடத்தும் மாசில்லா தீபாவளி மேளா கொண்டாடப்பட்டது. இதுகுறித்து, பள்ளித் தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் கூறுகையயில், “கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவ-மாணவியர்களின் மாசில்லா தீபாவளி மேளா வருடம் தோறும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின் மிக முக்கியமான நோக்கமாக தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்தோடும் மாசில்லாமலும் எவ்வாறு கொண்டாடப்படுவது என்பதனை அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.  மாசில்லா தீபாவளி மேளாவில் மாணவ-மாணவியர்கள் சாக்லேட் போன்ற உணவு பொருள், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். பழங்கால உணவு வகைகள், உடலுக்கு தீங்கு விளைவிக்காத உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்வதோடு மட்டும் அல்லாமல் பொருட்களை விற்கவும், வாங்கவும் கற்றுக் கொண்டனர்.  இவ்வாறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதன் மூலம் மாணவ-மாணவியர் எதிர்காலத்தில் வியாபாரம் எவ்வாறு செய்வது என்பதனையும் அதில் வரும் லாபம், நஷ்டம் ஆகியவற்றைப் பற்றியும், பழங்கால உணவுப் பொருட்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.   இந்நிகழ்ச்சியில் பழங்கால உணவு பொருட்கள், பாரம்பரிய உணவு திருவிழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மிகவும் ஆர்வமாக பங்கேற்றனர். பாரம்பரிய உணவு வகைகளை விதவிதமாக செய்து கொண்டு வந்து அசத்தினர். அனைத்து பெற்றோர்களுக்கும் சான்றிதழ்கள், சிறப்பாக இருந்த முதல் 10 உணவு வகைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.   இந்நிகழ்ச்சியில், மாணவ-மாணவியர்களே சிறு கடைகள் வைத்து நடத்துவதன் மூலம், அவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்கிறது’’ என கூறினர்.