tamilnadu

எண்ணூர் மற்றும் சென்னை முக்கிய செய்திகள்

பிச்சை எடுக்கும் போராட்டம் அனல் மின்நிலைய ஊழியர்கள் முடிவு

எண்ணூர், ஜன. 17- எண்ணூர் அனல் மின்  நிலையத்திலிருந்து வட சென்னை அனல் மின் நிலை யத்தில் பணிபுரியும்  ஊழி யர்கள் வருங்கால வைப்பு நிதியில் கடன்,  எஸ். எல்  சரண்டர்  போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி பல கட்ட  போராட்டங்கள் நடைபெற் றன.  இருந்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. வடசென்னை அனல்மின் நிலையம் 1மற்றும் 2-ஆகி வற்றில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு  பணப் பயன்  கள்  பொங்கல் பண்டிகை  முடிந்தும் இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை. இத னால் தொழிலாளர்கள் மன  உளைச்சல் அடைந்து கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். மின்வாரியம் மற்றும்  என்சிடிபிஎஸ் நிர்வாகம்  நிதி ஒதுக்கீடு செய்து உடனடி யாக பிரச்சனைகளுக்கு தீர்வு  காண வேண்டும். நடவ டிக்கை எடுக்காத பட்சத்தில் சிஐடியு சங்கத்தின் சார்பில் மாபெரும் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகும் நடவ டிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் ஜன.22. அன்று காலை யில்  வடசென்னை அனல்மின்  நிலையம் முன்பு தமிழ்நாடு  மின் ஊழியர் மத்திய அமைப்  பின் சார்பில் அதன்  மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இதில் அனைத்து தொழிற்  சங்கத்தை சேர்ந்த தொழி லாளர்கள் திராளக கலந்து கொள்ள உள்ளனர்.

ஐ.ஐ.டி மாணவர் விடுதியை சீரமைக்க  முன்னாள் மாணவர் ரூ.5 கோடி உதவி

சென்னை,ஜன.17- சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாண வரான கிருஷ்ண சிவுகுலா, விடுதியைச் சீர மைக்கக் கோரி ரூ.5 கோடியை  நன்கொடை யாக அளித்துள்ளார்.  இந்தோ-அமெரிக்க எம்.ஐ.எம். டெக் தனி யார் நிறுவனத் தலைவருமான கிருஷ்ண சிவு குலா,சென்னை ஐஐடியின் விடுதி மற்றும் சில கட்டமைப்புகளைச் சீரமைக்க ரூ.5  கோடியை நன்கொடையாக வழங்கி யுள்ளார். இந்த நன்கொடையின் மூலம்  சென்னை ஐஐடி.,யில் 1961-ல் கட்டப்பட்ட காவேரி மாணவர் விடுதி உலகத் தரத்திலான வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட உள்ளது.  இவர் ரூ.2.5 கோடியை சென்னை ஐஐடி., யிடம் அளித்துவிட்டார். அவருடைய நன்கொடை மூலம் தற்போது இரண்டு மாணவர் விடுதிகள் சீரமைக்கப்பட உள்ளன  என்று ஐஐடி, சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து கிருஷ்ண சிவுகுலா கூறு கையில்,  எந்தவித கட்டணமின்றி உலகத் தரத்தி லான தொழில்நுட்பக் கல்வியை சென்னை ஐஐடி நிறுவனம் எனக்கு அளித்தது. இதனால்,  ஹார்வர்டு பல்கலையில் படித்து வாழ்க்கை யில் வெற்றி பெற முடிந்தது. என்னை வாழ வைத்த சென்னை ஐஐடி.க்கு உதவுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் போல்  பிற மாணவர்களும் கல்வி வாய்ப்பை பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

கே-9 வஜ்ரா பீரங்கி செயல்பாடு தொடக்கம் 

சென்னை,ஜன.17- கே-9 வஜ்ரா-டி ரக பீரங்கி யின் செயல்பாட்டை பாது காப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் வியாழக்கி ழமை தொடக்கி வைத்தார். மத்திய அரசின் ‘இந்தியா வில் தயாரிப்போம்’ திட்டத் தின் கீழ், கே-9 வஜ்ரா-டி ரக பீரங்கிகள் தயாரிப்புக்கான ரூ. 4,500 கோடி மதிப்புடைய ஒப்பந்தம் கடந்த 2017-ஆம் ஆண்டு எல் அன்ட் டி ஆயுத  தொழிற்சாலைக்கு வழங்கப்  பட்டது. பாதுகாப்புத் துறை யின் கீழ் தனியார் நிறு வனத்துக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தம் இது வாகும். இந்த ஒப்பந்தத்தின் படி, 42 மாதங்களுக்குள் 100  கே-9 வஜ்ரா-டி ரக பீரங்கி களை மத்திய அரசுக்கு எல்  அன்ட்  டி நிறுவனம் வழங்க  வேண்டும். இந்நிலையில், குஜ ராத்தில் உள்ள எல் அன்ட் டி ஆயுத தொழிற்சாலையில் உற்பத்தியான 51-ஆவது கே-9 வஜ்ரா-டி ரக பீரங்கி யின் செயல்பாட்டை ராஜ்நாத்  சிங் நாட்டுக்கு அர்பணித் தார். 50 டன் எடையுள்ள கே-9  வஜ்ரா-டி ரக பீரங்கி, 47 கிலோ  எடை கொண்ட வெடி பொருள்களை வீசி எறியக்  கூடியது. 43 கி.மீ தொலைவு  வரை வெவ்வேறு இடங்க ளில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பீரங்கியாக இது உள்ளது.