districts

சென்னை முக்கிய செய்திகள்

மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2207 பணியிடங்களுக்கு விண்ணப்பம்

சென்னை, செப். 19- தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை  பட்டதாரி ஆசிரியர்கள், உடற்  கல்வி இயக்குனர் நிலை -1, கணினி பயிற்றுனர் நிலை 1  ஆகிய பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே இதற்கான அறிவிப்பு வெளியாகி, பின்பு  தள்ளிவைக்கப்பட்ட நிலை யில் தற்போதைய அறி விப்பின் மூலம் 2207 காலி  பணி இடங்கள் நிரப்பப்பட  உள்ளன. முதுகலைபட்டப் படிப்பில் 50 சதவீத தேர்ச்சி யும், பி.எட். படிப்பும் முடித்த வர்கள் விண்ணப்பிக்க தகுதி யானவர்கள். உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்று னர் பணிக்கு அது சார்ந்த படிப்பை முடித்திருக்க வேண்டும். 1-6-2021 அன் றைய தேதிப்படி 40 வயதுக் குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வும் உண்டு. ஆன்லைன் வழியே  விண்ணப்பிக்க கடைசி தேதி:  17-10-2021. ஆன்லைன் தேர்வு  நடைபெறும் நாட்கள்: 13-11- 2021, 14-11-2021, 15-11-2021.  விண்ணப்பிக்கும் விதம்,  விண்ணப்ப நடைமுறைகள் சார்ந்த விரிவான விவரங் களை http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி  அலுவலர், மேலாளருக்கு  4 ஆண்டுகள் சிறை

கரூர், செப்.19- கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றி யத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடை பெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஓட்டு  எண்ணிக்கைக்கு தேவையான மரப்பெட்டி களை கிருஷ்ணன் என்பவர் செய்து கொடுத் துள்ளார். இந்தநிலையில் அதற்கான தொகை  ரூ.65 ஆயிரத்து 500-ஐ கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கேட்டுள்ளார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன் (64), அலுவலக மேலாளர் மகாலிங்கம் (46) ஆகியோர் அதற்கான தொகையை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதற்கு கிருஷ்ணன் மறுத்துள் ளார். இதையடுத்து ரூ.5 ஆயிரம் கேட்டுள் ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன் இந்த சம்பவம் குறித்து லஞ்ச  ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கிருஷ்ணன் ரூ.5 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீ சார் அவர்கள் 2 பேரையும் பிடித்தனர். இந்த வழக்கு கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை குற்ற வியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் வழங்கி னார். அதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன், மேலாளர் மகாலிங்கம் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபரா தமும் விதித்தார்.

ஓசூர் அருகே வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

கிருஷ்ணகிரி, செப். 19- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ராமச்சந்திரம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி கோபால் (50). இவர் வளர்த்து வரும் ஆடுகளை வழக்கம்போல் சனிக்கிழமை இரவு பட்டியில் அடைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது இரண்டு வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 8ஆடுகள் இறந்து கிடந்தன. விரட்ட சென்ற போது மனிதர்களையும் ஆக்ரோசத்துடன் நாய்கள் கடிக்க வந்துள்ளன. அதனை கட்டையால் அடித்து கொன்றனர். கடந்த சில நாட்களாக அந்தேவனப்பள்ளி பகுதியில் இதேபோல் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் இறந்தன. அப்பகுதியில் இறைச்சி கடைகளில் இருந்து கோழி கழிவுகளை கொண்டு வந்து சாலை ஓரங்களில் கொட்டுவதால் இறைச்சி கழிவுகளை சாப்பிட்டு பழக்கப்பட்ட வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொல்வது வாடிக்கையாக உள்ளதாகவும், இறைச்சி கழிவுகளை வெளியிடங்களில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.