tamilnadu

அரசாணை எண் 297 ரத்து செய்யக்கோரி: நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாணை எண் 297 ரத்து செய்யக்கோரி:  நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர், ஜூலை 8 - தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வேலூர் மாவட்டம் சார்பாக வெளி முகமை மூலம் புல உதவியாளர்களை பணியமர்த்தும் அரசாணை எண் 297 ரத்து செய்யக்கோரி  வேலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலை வர் ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்க மாவட்ட தலைவர் பி.ரமேஷ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் சுதர்சனம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்எஸ்.தீனதயாளன்,  ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பா.வேலு, வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் துரைராஜ், அரசு ஊழியர் சங்க வேலூர் தெற்கு வட்ட கிளை தலைவர் சபரிவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.