கன்னடபாளையம் குப்பை கிடங்கு அகற்றப்படும் சூழலியல் நடையில் துணை மேயர் காமராஜ் தகவல்
சென்னை, அக். 11 – தாம்பரம் கன்னடபாளை யம் குப்பை கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தாம்பரம் துணை மேயர் ஆர். காமராஜ் தெரி வித்துள்ளார். காயிதே மில்லத் (ஆண்கள்) கல்லூரியின் பொன்விழா (50வது ஆண்டு) ஆண்டையொட்டி சனிக்கிழமையன்று (அக்.11) காமராஜபுரம் முதல் மேடவாக்கம் வரை சூழலியல் நடைப்பயணம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம், இஸ்லாமிய வர்த்தகர்கள் நலசங்கம், எக்ஸ்னோரா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கல்லூரி நிர்வாகம் இந்நிகழ்வை நடத்தியது. “ஆரோக்கியமான காற்று - பசுமையான எதிர்காலம்” என்ற கருப் பொருளில் நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் 1500க்கும் அதிகமான மாண வர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் தாளாளர் எம். ஜி. தாவூத் மியாகான், தாம்பரம் மாநகராட்சி துணைமேயர் சி. காமராஜ், உதவி வனப் பாதுகாவலர் சி. இளங்கோ ஆகியோர் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் எம். தங்கராஜ், ஏரிகள் பரா மரிப்பையும், கன்னட பாளையம் குப்பை கிடங்கை அகற்றவும் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து பேசிய துணை மேயர், சுற்றுச்சூழலை பாது காக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. கன்னட பாளை யம் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். திரு மூர்த்தி, இஸ்லாமிய வர்த்தகர்கள் நல சங்க செயலாளர் அயூப் கான், தாம்பரம் வனத்துறை ரேஞ்சர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பேசினர். விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி சூழ லியல் உறுதி மொழியை வாசித்தார்.
