tamilnadu

img

அனைவராலும் மதிக்கப்படும் அரசியல் பெட்டகம் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜூன் 3 - தமிழகத்தை போன்ற இந்தியா முழு வதும் சனாதனத்தை வீழ்த்த உறுதியேற் போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் கூறினார். கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி திங்க ளன்று (ஜூன் 3) சென்னையில் நடை பெற்றது.  

இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: அரசியலையும் தாண்டி அனைவரா லும் மதிக்கப்படும் அரசியல் பெட்ட கமாக கலைஞர் உள்ளார். அவர் பல்கலைக் கழகத்தில் சென்று படிக்கவில்லை. ஆனால் அவரது படைப்புகள் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி புத்தகங்கள் உள்ளன. இந்திய அரசியலில் வழி காட்டுபவராக திகழ்ந்தார். தமிழக அரசியல் தலைவர்களில் அதிக பக்கங்களை எழுதியவர் கலைஞர்தான். சாமனியராக பிறந்த கலைஞரை, அவரது கடுமையான உழைப்புதான் தேசியத் தலைவராக உயர்த்தியது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் கொண்டு வந்தது உள்ளிட்ட ஏராள மான சாதனைகளை புரிந்துள்ளார். தமிழ கத்தில் பாஜக காலூன்ற முடியாத தற்கு கலைஞரின் அரசியல் பணி யும் ஒரு காரணம். அவசரநிலை கொண்டு வந்தபோது ஜனநாய கத்தை பாதுகாக்க ஆட்சியை இழந்தவர் கலைஞர். கொள்கை பற்றோடு இருந்த கார ணத்தால் தேசிய தலைவர்களே வியந்து பார்க்கும் தலைவராக கலைஞர் உள்ளார். அவரது வாழ்வை பாடமாக ஏற்று கொள்கை உறுதியோடு செயல்பட வேண்டும்.

பாஜகவை வீழ்த்தினாலும், சனாதன கூட்டத்தை வீழ்த்தும் போராட்டத்தை தொடர  வேண்டும். அதைத்தான் கலைஞரின் வாழ்க்கை உணர்த்துகிறது. தமிழகத்தை போன்ற இந்தியா முழுவதும் சனாதன சக்தி கள் தலை தூக்க விடாமல், துடைத்தெறியும் பணியை தொடர்வோம். இவ்வாறு அவர் பேசினார். திமுக தென்சென்னை மாவட்டச் செய லாளரும், அமைச்சருமான மா.சுப்பிர மணியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பெருங்கவிக்கோ வ.மு.சேது ராமன் எழுதிய ‘கலைஞர் காவியம்’ என்னும் நூலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி வெளியிட்டார்.

காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, மதிமுக பொருளாளர் செந்தில திபன்,  சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  தலைவர் கே.எம். காதர்மொகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., உள்ளிட்டோர் பேசினர்.

;