சென்னை, ஏப். 14-ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-இராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்.பி.யும், எனது நண்பருமான ஜே.கே.ரித்தீஷ், இளம் வயதில் திடீரென்று மறைந்துவிட்டார் என்ற துயர செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந் தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கருணாநிதியிடமும், என்னிடமும் அளப்பரிய அன்பு காட்டிய ஜே.கே.ரித்தீஷ், தி.மு.க.வில் இருந்தபோது நாடாளுமன்றத் தில் சிறப்பாக பணியாற்றியவர். இராமநாதபுரம் தொகுதி மக்களின்பிரச்சனைகளை ஆணித்தரமாக மக்களவையில் வாதிட்டவர்.அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.