சென்னை, செப்.2- தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேக மாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கை கள் குறித்து 11 துறைகள் இணைந்து திங்க ளன்று (செப்.2) ஆலோசனை நடத்தி யது. பின்னர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 11 ஆயிரத்து 743 பேரு க்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பு விகிதம் கடந்த ஆண்டுகளை விட மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4 பேர் இறந்துள்ளனர். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு 66 பேரும், 2017 ஆம் ஆண்டு 65 பேரும் இறந்தனர். அரசு எடுத்த தீவிர முயற்சியால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன. டெங்கு பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சை காரணமாக இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு பருவமழைக் காலங்களில் பரவும் நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலி காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளி ட்ட தொற்று நோய்களை கட்டுப் படுத்த 4,676 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஒருங்கி ணைத்து கண்காணிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்கு தேவையான மருந்துகள், பரிசோத னை கருவிகள் தேவையான அளவு கை யிருப்பில் உள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க அனைத்துப் பகுதிகளிலும் மருந்துகள் தெளிப்பது, புகை அடிப்பது போன்ற பணி கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இதற்கு தேவையான மருந்துகள், எந்திரங்கள் கை யிருப்பில் உள்ளன என்றார்.