ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் டி.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மின்வாரிய பிரிப்பு, தனியார்மய எதிர்ப்பு, ஸ்மார்ட் மீட்டர் பாதிப்பு குறித்து மக்கள் சந்திப்பு இயக்கம் வியாழனன்று (பிப்.20) மத்திய சென்னை மாவட்டம், திருவல்லிக் கேணியில் தொடங்கியது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு, சிஐடியு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த சந்திப்பு இயக்கத்தை தொடங்கி உள்ளன. இந்நிகழ்வில் மத்தியஅமைப்பின் தலை வர் மாநிலத்தலைவர் டி.ஜெய்சங்கர் பேசிய தாவது: மின்வாரியத்தை பாதுகாக்க மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கத்தை நடத்தி வரு கிறோம்.
மின்சார வாரியம் 1.62 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. வாரியம் நஷ்டத் தில் இயங்குவதற்கு அரசு தான் காரணம். மின்சார வாரியத்தை தனியாரிடம் கொடுப் பதற்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கி றது மாநில அரசு அதற்கு துணை போகிறது. மின்சார வாரியம் நேரடியாக உற்பத்தி செய்கிறபோது யூனிட்டிற்கு சராசரியாக 6.50 பைசா செலவாகிறது. உற்பத்தியை அதிகரிக் காமல் மாநில அரசு தனியாரிடமிருந்து யூனிட் 20 - 30 ரூபாய் வாங்க உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் எங்கெல்லாம் பொருத்தப் படுகிறதோ அங்கெல்லாம் மானிய விலை மின்சாரம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் ஒரு யூனிட் கட்டணம் 10 முதல் 12 ரூபாய்க்கு விற்கப்படும். அதாவது கட்டணம் 4 மடங்காக உயரும். மேலும், வாரியத்தை சிறு சிறு கம்பெனிகளாக பிரித்து தனியாரி டம் கொடுக்கும் அரசின் முயற்சி கைவிடப்பட வேண்டும். தனியார் மயத்தை சிஐடியு ஒரு போதும் ஏற்காது என்றார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு மத்திய சென்னை திட்டத் தலைவர் வி.சீனி வாசன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத் தலைவர் எம்.தயாளன், மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், மண்டல செய லாளர் ஏ.முருகானந்தம், மத்திய சென்னை பொருளாளர் எஸ்.முருகவேல், தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொரு ளாளர் ஏ.பழனி, சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, வியா பாரிகள் சங்க பொதுச்செயலாளர் எம்.வி. கிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை யாற்றினர். ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கிளைச்செயலாளர் எஸ்.சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.முன்னதாக அண்ணா சாலை கோட்ட செயலாளர் பி.ரவி வரவேற்றார்.