புதுதில்லி:
இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் மூலம் ஆண் டுக்கு ரூ.75 ஆயிரம் கோடிக்கும் (1,030கோடி டாலர்கள்) அதிகமாக வரி ஏய்ப்புசெய்யப்படுவதாக ‘தி ஸ்டேட் ஆப் டேக்ஸ் ஜஸ்டிஸ்’ அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் ஆண்டுதோறும் 42 ஆயிரத்து 700 கோடி டாலர்கள் (ரூ.31 லட்சத்து 66 ஆயிரம் கோடி) அளவுக்குசர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் மூலம் வரி ஏய்ப்பு அல் லது மோசடி நடக்கிறது.இதில், இந்தியாவில் மட்டும், ஆண்டுதோறும் தனிநபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் 1,030 கோடிடாலர்கள் (ரூ. 75 ஆயிரம் கோடி) அளவிற்கு வரி ஏய்ப்பு நடக்கிறது.இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் (ஜிடிபி) 0.41 சதவிகிதம் ஆகும் என்று ‘தி ஸ்டேட் ஆப் டாக்ஸ் ஜஸ் டிஸ்’ (The State of Tax Justice) அமைப்பு கூறியுள்ளது.இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங் கள் மட்டும் 1,000 கோடி டாலர்கள் அளவுக்கு ஆண்டு தோறும் வரி ஏய்ப்பு\மோசடியில் ஈடுபடுகின்றன. தனிநபர் களை எடுத்துக் கொண்டால், அது 20 கோடி டாலர்கள் அளவுக்கே இருக்கிறது என்று கூறியுள்ள ‘டாக்ஸ் ஜஸ்டிஸ்’அமைப்பு, இந்த வரி ஏய்ப்பு தொகையானது, இந்திய அரசு சுகாதாரத்துக்கு ஒதுக்கும் நிதியில் 44.70 சதவிகிதம்; கல்விக்குச் செலவிடும் தொகையில் 10.68 சதவிகிதம், எல்லாவற்றுக்கும் மேலாகஇந்த தொகையை வைத்து, இந்தியாவில் 42 லட்சத்து 30 ஆயிரம் செவிலியர்களுக்கு ஆண்டு முழுவதும் ஊதியம்வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.