மார்த்தாண்டம், மே 9- மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க அலுவலகம் முன் தேன் உற்பத்தியாளர்கள் கஞ்சி தயார் செய்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் வெட்டுவெந்நியில் உள்ளது. தேன் உற்பத்தியாளர்களின் வளர்ச்சிக்காகவும் நலனுக்காகவும் இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
தற்பொழுது மொத்தமாக 2087 உறுப்பினர்கள் உள்ளனர். குமரி மாவட்டத்தில் இயற்கை வளங்கள் நல்ல நிலையில் உள்ளதால் தேன் உற்பத்திக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. ஆண்டுதோறும் 11 மாதங் கள் தேன் கூடுகளை தோட்டங்களில் வைத்து பராமரிப்பர். பிப்ரவரி முதல் மார்ச் வரை தேன் சீசனாகும்.
இந்த சீசனின் போது தேனீ உற்பத்தி யாளர்கள் தேனை எடுத்து மார்த்தாண் டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் கொடுப்பது வழக்கம். இந்த சங்கத்தில் ஆண்டுதோறும் மூன்றரை லட்சம் கிலோ தேன் கொள்முதல் செய்யப் படுகிறது. ஆனால் சராசரியாக ஆண்டுக்கு இந்த மாவட்டத்தில் 10 லட்சம் கிலோ தேன் வரை உற்பத்தி செய்யப்படு கிறது. ஒரு கிலோ தேன் ரூ. 155க்கு வாங்கப்படுகிறது. முழுமையாக கொள்முதல் செய்யாததால் குறைந்த விலையில் தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலைமை ஏற் படுகிறது.
இதனால் தேன் உற்பத்தி யாளர்கள் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். அனைவரிடமும் கொள்மு தல் செய்ய வேண்டும் என்று தேன் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வரு கின்றனர் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட தேன் அனைத்தையும் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கூட்டுறவு சங்கத்தின் 10 லட்சம் கிலோ தேன் வரை தேக்கி வைப்ப தற்கான வசதியை அமைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேன் உற்பத்தியாளர்கள் 38ஆவது நாளாக கூட்டுறவு சங்க அலு வலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களாக தினசரி கஞ்சி தயார் செய்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கூட்டுறவு சங்க நிர்வாககுழு உறுப்பினர் அருமனை யை சேர்ந்த சுந்தர்ராஜ் குழித்துறை சப்பாத் அருகே வந்துகொண்டிருந்தார். இவரை பார்த்த தேன் உற்பத்தியா ளர்கள் முற்றுகையில் ஈடுபட்டு இவரை கூட்டுறவு சங்கத்திற்கு வலுக்கட்டாய மாக அழைத்து வந்தனர். பின்னர் அவரை அலுவலகத்திற்குள் வைத்து சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து அவரை மீட்டுச் சென்றனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் கூட்டுறவு சங்கம் முன் பிளக்ஸ் வைக்கப்பட்டது. இதை தேன் உற்பத்தி யாளர்கள் கிழித்து எறிந்தனர். இத னால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ஆண்டுதோறும் தேன் உற்பத்தி யாளர்களின் இந்த பிரச்சனை அதி கரித்து வருகிறது. உற்பத்தியாகும் தேன் மொத்தமும் கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் செய்துவிட்டு இதற்கான பணத்தையும் உடனே வழங்க வேண்டும். தேனி வளர்ப் போரை ஊக்குவிக்கும் விதமாக மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதேன் உற்பத்தியா ளர்களின் கோரிக்கையாகும்.