tamilnadu

img

மீண்டும் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....

சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பல நகரங்கள் வெள்ளத் தில் மிதந்தன. அதன் பின்னர் சுமார் 3 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது.இந்த நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக வறண்ட வானிலை நிலவும் நிலையில், புதன்கிழமையும் அதே வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மேலும் வடகிழக்குப் பருவக் காற்று, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி ஆகியவற்றின் காரணமாக வரும் 16ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரி காரைக்காலில் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப் புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

;