செங்கற்பட்டில் அரசு மகளிர் கல்லூரி, பால்டெக்னிக் கல்லூரி துவங்கிடுக
மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
செங்கல்பட்டு, ஆக.16- இந்திய மாணவர் சங்கத்தின் செங்கற்பட்டு மாவட்ல் 28வது மாநாடு செங்கற்பட்டில் மாவட்டத் தலைவர்.சத்தியதாஸ் தலைமையில் நடைபெற்றது. சங்கக் கொடியை மாவட்ட து.தலைவர் திவ்யா ஏற்றி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர். கிருஷ்ணகுமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட துணைத்தலைவர். முரளிதரன் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டை மாநிலச் செயலாளர் தோழர் அரவிந்தசாமி துவக்கி வைத்து சிறப்புரை உரையாற்றினார். மாவட்டச் செயலாளர். தயாநிதி வேலை அறிக்கை முன்வைத்தார். மாநாட்டிற்கு வருகை தந்த பிரதிநிதிகள் அறிக்கையின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசினர். சங்கத்தின் மாநில இணைச் செயலாளர். மு.தமிழ்பாரதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர். ச.ஜீவானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்டத்தின் தலைவராக சத்தியதாஸ், செயலாளராக தயாநிதி, துணைத்தலைவர்களாக ஆகாஷ், கிருஷ்ணா, துணைச் செயலாளர்களாக திவ்யா, முரளி ஆகியோர் அடங்கிய 17 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழுவை அறிமுகம் செய்து வைத்து மாநில இணைச் செயலாளர். மிருதுளா நிறைவு ரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர். ஆகாஷ் நன்றி கூறினார்.