அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தியும், முறையான பேச்சுவார்த்தை நடத்தாமல் சங்க நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நிர்வாகத்தையும், தமிழ்நாடு காவல்துறையையும் கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தலைவர் சா.பாபு தலைமையில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக்கிளை செயலாளர் ம.அப்துல் மஜீத் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் நா.முத்துவேலன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.