tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேஸ் சிலிண்டர்  டெலிவரி ஊழியர் வெட்டிக்கொலை

சென்னை, ஜூலை 20-  பெரும்பாக்கம் பகுதியில் சனிக்கிழமை யன்று பொதுமக்கள் நடைபயிற்சி சென்ற போது, அங்குள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகம் சிதைக்கப் பட்டு சடலமாக கிடந்துள்ளார். கேஸ்சிலிண்டர் போடும் வேலை செய்து வரும் பழனிச்சாமி(36) பெரும்பாக்கம், எழில் நகர், 105வது பிளாக், 2வது மாடியில்  வசித்துவந்ததார். மனைவியோடு கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு  ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்தநிலை யில் பேருந்துநிலையம் அருகில் சனிக் கிழமையன்று மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

கரிக்கிலி ஊராட்சியில்  சாலை பணிகள் நிறைவு

மதுராந்தகம், ஜூலை 20-  செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப் பாக்கம் ஒன்றியம் நெல்வாய் கூட்ரோடு பகுதியில் இருந்து கரிக்கிலி ஊராட்சி வழி யாக வெள்ளம்புத்தூர் வரை செல்லும் சுமார் 4கி.மீ தூரத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் சாலை சீரமைக் கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், கரிக்கிலி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 1200 மீட்டர் தூரம் கொண்ட பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டி இருந்த 1200 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. சுமார் 4 கி.மீ தூரம் கொண்ட தார் சாலை சீரமைக்கும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடுங்கையூரில்   சைக்கிள் திருடன் கைது

சென்னை,ஜூலை 20- கொடுங்கையூரில் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுவந்த தாமோதரன் (54)  என்பவரை கைது செய்யப்பட்டார். அவரி டமிருந்து கொடுங்கையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடு போன 6 சைக்கிள்கள் உட்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 40 சைக்கி ள்கள் மீட்கப்பட்டது. மேலும் விசாரணையில் தாமோதரன், கொடுங்கையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் முன்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலைமதிப்புள்ள சைக்கிள்களை நோட்ட மிட்டு திருடியுள்ளது சிசிடிவி கேமிராவில் தெரியவந்தது. இந்நிலையில் கைது செய்ய ப்பட்ட தாமோதரன் சிறையில் அடைக்கப் பட்டார்.