உலக மூத்தோர் தினம் முன்னிட்டு மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், தடையற்ற நடைபாதைகளை பயன்படுத்தும் உரிமையை மீட்டெடுத்து வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மத்திய-மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெள்ளியன்று (அக்.3) காஞ்சிபுரம், காவலன்கேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த, ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஓய்.சீத்தராமன் தலைமையில், மாவட்டச் செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் ஜெ.துரைவேலு, ஆர்.ராஜேந்திரன், என்.சாரங்கன், எஸ்.ராமச்சந்திரன், டி.தாமோதரன், மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் எம்.பி.திலகம், என்.சுந்தரவடிவேலு, வி.ஹரிகிருஷ்ணன், டி.ஸ்ரீதர், வி.தென்னரசு உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
