tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

வி பி சிந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம்'

தோழர் வி பி சிந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் செயல்பட்டு வரும் தோழர் வி பி சிந்தன் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்ட செயலாளர் எஸ்.ராஜா, ஆட்டோ சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எம் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வியாபாரிகளின் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிப்பு

பல்லாவரம் வாரச்சந்தை வியாபாரிகளின் கோரிக்கைகள் தொடர்பாக கன்மோண்மென்ட் செயல் அதிகாரி மரு.வினோத் விக்னேஷ்வரனிடம்,  பல்லாவரம் கன்டோன்மெண்ட் வாரச்சந்தை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தின் கவுரவ தலைவர் க.பீம்ராவ், தலைவர் ஒய். இஸ்மாயில், செயலாளர் பூமிநாதன், துணைத் தலைவர் பி.முருகன் ஆகியோர் மனு அளித்து பேசினர்.

41ஆவது வார்டில் கால்வாய் கட்டுமான பணி

ஆர்.கே.நகர் 41ஆவது வட்டம் எழில் நகர் ஏ மற்றும் பி பிளாக்  பகுதியில்  மழை நீர் கால்வாய் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்  ஜே.ஜே.எபினேசர்,  மண்டல குழு தலைவர் நேதாஜி யூ.கணேசன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, திமுக பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், சிபிஎம் பகுதி  செயலாளர்  வெ.ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

\