tamilnadu

img

நீட் மதிப்பெண் சான்றிதழை திருத்தி மேலும் 3 மாணவிகள் மோசடி....

சென்னை:
நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் மேலும் 3 மாணவிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை பற்றிய விவரங்களை பெரியமேடு போலீசார் சேகரித்துள்ளனர்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த மருத்துவ கலந்தாய்வில் கடந்த 7-ந்தேதி பரமக்குடியை சேர்ந்த மாணவி தீக்ஷா, தந்தை பாலச்சந்திரனுடன் கலந்துகொண்டார். அப்போது தான் 610 மதிப்பெண் களை பெற்றிருப்பதாக தீக்ஷா சான்றிதழை அளித்தார். அதனை பரிசோதித்து பார்த்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது.இதையடுத்து பெரியமேடு போலீசில் மருத்துவ அதிகாரிகள் புகார் அளித்தனர். இதன் பேரில் காவல்துறையினர் மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதையடுத்து மாணவி தீக்ஷாவிடமும், தந்தை பாலச் சந்திரனிடமும் விசாரணை நடத்த பெரியமேடு காவல்நிலையத்தினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இன்று காலை ஆவணங்களோடு நேரில் வருமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் மேலும் 3 மாணவிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் களை பற்றிய விவரங்களையும் பெரியமேடு போலீசார் சேகரித்துள்ளனர். மாணவி தீக்ஷா, அவரது தந்தை பாலச்சந்திரன் ஆகியோருடன் விசாரணை நடத்திய பிறகு 3 மாணவிகளையும் நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாணவி தீக்ஷா போலியாக அழைப் பாணை தயாரித்து கலந்தாய் வில் பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கலந்தாய் வில் பங்கேற்க வந்தபோது மாணவி தீக்ஷா 10 ஆவணங் களை அளித்துள்ளார். அனுமதி அட்டை, மதிப்பெண் அட்டை, தரவரிசை பட்டியல் உள்ளிட்ட விவரங்களையும் அவர் அளித்துள்ளார்.இந்த 10 ஆவணங்களையும் கலந்தாய்வு அதிகாரிகள் பெரியமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த ஆவணங்கள் அனைத்தும் சரியானதுதானா? என்பது பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான தனிப்படையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.பரமக்குடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் தான் மாணவி தீக்ஷா போலி சான்றிதழை தயாரித்ததாக தெரிகிறது. 610 மதிப்பெண் பெற்ற இன்னொரு மாணவியின் சான்றிதழில் தனது புகைப் படத்தை ஒட்டி போலி சான்றிதழை அவர் தயாரித்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அந்த கம்ப்யூட் டர் மைய நிர்வாகியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப் படுகிறது.

;