தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தென்சென்னை 1, 2 கிளைகள் சார்பில் 150 தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா சேகரிக்கப்பட்டது. சந்தாக்களுக்கான தொகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம், சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம் வழங்கினார். உடன் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், நிர்வாகிகள் வி.விஜயபாஸ்கர், டி.பண்டாரம் பிள்ளை ( கிளை 1), எம்.தண்டபாணி, பி.கௌதமன் (கிளை-2), உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் இ.விஜயலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஹெலன் தேவ கிருபை உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.