மாவட்டம், கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளை யம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடி நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்படுவ தாக புதன்கிழமை (மே 15) காலை யில் புகார் அளித்தனர். மேலும், உறுதிப் படுத்தப்படாத இந்த தகவலை சில தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் செய்தன. இது மாவட்டம் முழுவதும் தீயாக பரவியது. ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. அந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை அறியும் சோதனைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், விக்கிரவாண்டி கிராம மக்களின் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்ட ஆட்சி யரின் உத்தரவின் பேரில் போலீசார், கிராம நிர்வாக அலுவலர், கூடுதல் ஆட்சியர் உள்பட பல்வேறு அதி காரிகள் கே.ஆர். பாளையம் கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அதில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்படவில்லை என்பது உறுதியானது. மேலும், கிணற்றுக்குள் தேன் அடை கிடந்துள்ளது. அதை மனித மலம் என கிராம மக்கள் தவறாக கருதி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து ள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அந்த தேன் அடையை கிராம மக்களிடம் அதிகாரிகள் காட்டினர். இதையடுத்து, மலம் கலந்து விட்டது என்று கூறப்பட்டது உண்மை யில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், உடனடியாக அந்த திறந்தவெளி கிணற்றின் மீது இரும்பு கம்பிகளால் வேலி அமைக்க மாவட்ட ஆட்சியர் பழனி உத்தர விட்டார்.