புதுச்சேரி,பிப்.7- மாணவர்கள் கற்றல் திறன் மேம்பட மாணவர்க ளுக்கு எளிய வகையில் பல அரியதகவல்களை வெளிப்படுத்தும் விதமாக, புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் யாழ் கலை மையம் சார்பில் நாடகத் திருவிழா நடை பெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கிய பள்ளித் தலைமையாசிரியர் சங்கர் நாடகவிழாவை துவக்கி வைத்தார். நாடக இயக்குநர் கோபி இயக்கத்தில் “மீன் வாங்கலையோ மீன்” என்ற தலைப்பில் பிரபேந்தி ரன் மற்றும் பத்மனாபன் அவர்களின் நடிப்பில் நடை பெற்ற நாடகத்தில் கடல், கடலில் ஏற்படும் ஓசை, நிறம், வளம், உட்பட பல அரிய தகவல்கள் மிகவும் தெளிவாக அனைத்து மாணவர்களும் ஒன்றி ரசிக்கும் படியும் மாணவர்களும் இணைந்து பாடல்கள் பாடி மகிழும் வகையில் நாடகம் நடைபெற்றது. மாணவக் குழந்தைகளின் சிந்தனை, பேச்சாற் றல் ஆகிய திறன்களை வெளிக்கொணரும் விதமாக விழா அமைந்தது. பத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி களில் இக்குழுவினர் இந்த நாடகத்தினை அரங்கேற் றம் செய்து பாராட்டுகளைப் பெற்றுள்ளதாக நிகழ்ச்சி யில் பங்கேற்ற புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் நிர்வாகி அருண் நாகலிங்கம் பேசினார். விழாவில் ஆசிரியர்கள் ரேணுகாதேவி, ராஜ லட்சுமி, தனவந்தனி, புவனேஷ்வரி, ஹேமலதா, அருள் ஜோதி, ஷியாமளா, ஜெயந்தி மற்றும் தன்ராஜா உள் ளிட்ட திரளான மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக நாடகவியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.