tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மதுரவாயல் பகுதியில் டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பு

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு வியாழனன்று (ஏப்.4) மதுரவாயல் பகுதிக்குட்பட்ட 151-155 வார்டுகளில் வாக்கு சேகரித்தார். திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ, வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி, சிபிஎம் பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

வட, மத்திய  சென்னை வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் 

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு புதனன்று (ஏப்.3) வில்லிவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். திமுக பகுதிச் செயலாளர் கூ.பி.ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, ஆ.வெற்றியழகன் எம்எல்ஏ, திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா,  சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, ஆ.பிரியதர்ஷினி எம்.சி., சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசினர்.

விருகம்பாக்கம் பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பு

தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் வியாழனன்று (ஏப்.4) விருகம்பாக்கம் பகுதி, 129, 136வது வார்டுகளில் வாக்கு சேகரித்தார்.  பகுதி முழுவதும் அவருக்கு மலர் தூவி, கோலமிட்டு பெண்கள் வரவேற்று ஆதரவளித்தனர். இந்த வாக்கு சேகரிப்பில் ஏ.எம்.வி. பிரபாகரராஜா எம்எல்ஏ, க.தனசேகரன் எம்.சி., சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர் இ.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன் உள்ளிட்ட மாநகராட்சி உறுப்பினர்கள், கூட்டணி கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.