மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் திங்களன்று (ஏப்.8) சோழிங்கநல்லூர் பகுதி, 183, 185, 192, 193, 194, 195, 196 ஆகிய வட்டங்களில் வாக்கு சேகரித்தார். திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, சிபிஎம் பகுதிச் செயலாளர் ஜி.வீரா உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தாம்பரம் பகுதியில் வாக்கு சேகரித்தார். திமுக நகரச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, சிபிஎம் பகுதிச் செயலாளர் க.வெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மயிலாப்பூர் பகுதி, 125வது வட்டம் நொச்சிக்குப்பத்தில் கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு விருகம்பாக்கம் பகுதி, 131வது வட்டத்தில் கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
திருப்பெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு-வுக்கு வாக்கு கேட்டு மதுரவாயல் பகுதி 146வது வட்டத்தில் கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.