tamilnadu

எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி: ஒடிசா வல்லுநர் குழு சென்னை வருகை

சென்னை, டிச.15- வடசென்னையில் பக்கிங்காம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய்க் கழிவு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்கள் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந் துள்ளனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளத்தில் கலந்து, வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கழிவுகள் படிந்து, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது முகத்துவாரப் பகுதியில் எண்ணெய் கழிவு படலங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், சென்னை பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்தில்  இருந்து கழிவுகள் வெளியேறி யதாக தெரிவித்திருந்தது.

இந்த எண்ணெய் கழிவுகளை விரைந்து அகற்ற தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடலில் இருந்து எண்ணெய்யை அகற்ற சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய  அதிகாரிகள் தீவிரமாக பணி யாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் எண்ணெய் கழிவை அகற்றும் பணி தொடர் பாக ஒடிசா மாநிலத்தில் இருந்து வல்லுநர் குழு டிச.15 அன்று சென்னை எண்ணூருக்கு வருகை  தந்துள்ளது. ஏற்கனவே ட்ரோன்  உள்ளிட்ட நவீன தொழில்நுட் பங்களுடன் ஐ.ஐ.டி. குழு எண்ணூ ரில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாளைக்குள் அகற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. மேலும்,  எண்ணெய் கழிவுகளை விரைவாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கும், சிபிசிஎல் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசார ணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற தும் பிறப்பித்த உத்தரவில், ‘‘டிசம்பர் 17-ஆம் தேதிக்குள் 100  விழுக்காடு எண்ணெய் கழிவு களை அகற்ற வேண்டும். 18 ஆம்  தேதி நடைபெறும் அடுத்த விசார ணையின் போது, அது தொடர்பான  அறிக்கையை சிபிசிஎல், தமிழ்நாடு  மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தாக்கல் செய்ய  வேண்டும்’’ என்று தெரிவித்துள் ளனர்.